'நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல்' : மானசியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஸ்ரீதர் சேனா
ADDED : 784 days ago
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலங்களான மானசியும், ஸ்ரீதர் சேனாவும் நல்ல நண்பர்கள் என்பதை தாண்டி அண்ணன், தங்கையாக தான் பழகி வருகின்றனர். ஆனால், இருவரும் காதலித்து வருவதாக அடிக்கடி சில வதந்திகள் பரவி வந்த நிலையில், அதற்கெல்லாம் மானசியும், ஸ்ரீதர் சேனாவும் தனது தூய நட்பால் பதிலடி கொடுத்து வந்தனர். இந்நிலையில், மானசி தனது 23-வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடினார். அதில் கலந்து கொண்ட ஸ்ரீதர் சேனா மானசியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு, ‛‛எப்போதும் நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல் என பதிவிட்டு மானசியை நச்சரிக்கும் தங்கச்சி'' என குறிப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக இருவரது நட்பு மற்றும் சகோதரத்துவத்தை பலரும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.