துள்ளி துள்ளி போட்டோ எடுத்த புவியரசு : வைரலாகும் மெட்டர்னெட்டி போட்டோஷூட்
ADDED : 784 days ago
ஜீ தமிழ் நடிகரான புவியரசு ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, வித்யா நம்பர் 1 ஆகிய தொடர்களின் மூலம் பிரபலமாகியுள்ளார். இவர் மோகன ப்ரியா என்பவரை கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது மோகன ப்ரியா கர்ப்பமாக இருக்கிறார். இதனைதொடர்ந்து சமீபகாலங்களில் டிரெண்டாகி வரும் மெட்டர்னிட்டி போட்டோஷூட்டிற்காக புவியரசும் மோகனப்ரியாவும் போஸ் கொடுத்துள்ளனர். அதிலும் புவியரசு மனைவிக்காக பறந்து, துள்ளி குதித்து ஜாலியாக போட்டோஷூட்டுக்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களானது இணையத்தில் வைரலாக, 'புள்ள பெத்துக்கிறத விட போட்டோவுக்கு போஸ் கொடுப்பது ரொம்ப கஷ்டம் போலயே' என புவியரசை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.