மலையாளத்தில் அறிமுகமாகும் சிவராஜ் குமார்
ADDED : 785 days ago
கன்னட நடிகர் சிவராஜ் குமார் கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். சமீபத்தில் வெளிவந்த 'ஜெயிலர்' படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளார். இதையடுத்து தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிவராஜ் குமார்.
கடந்த சில நாட்களாக ஜெயிலர் படத்தினால் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் அதிக பேசப்படும் நடிகராக சிவராஜ் குமார் உள்ளார். இந்த நிலையில் மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கி, நடிக்கவுள்ள படம் ' டைசன்'. பான் இந்திய படமாக உருவாகும் இப்படத்தில் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.