உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினி, நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்த கமல்

ரஜினி, நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்த கமல்

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து கடந்த வாரத்தில் வெளிவந்த திரைப்படம் 'ஜெயிலர்'. ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை ஈட்டி வருகிறது. இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே ரஜினி இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் சென்றார். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள கமல்ஹாசன், ஜெயிலர் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு ரஜினிகாந்த் மற்றும் நெல்சனுக்கு போன் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் படத்திற்கு பின் ஜெயிலர் படத்தின் வசூல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அதிக வசூல் சாதனை செய்து அதிக லாபம் தந்த படமாக கமலின் விக்ரம் படம் உள்ளது. அதை ரஜினியின் ஜெயிலர் படம் முறியடிக்கும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !