காவாலா பாட்டிற்கு ‛வைப்' செய்த ஜப்பான் தூதர்
ADDED : 790 days ago
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி, வரவேற்பை பெற்றுள்ள படம் ‛ஜெயிலர்'. இந்த படத்தில் அனிருத் இசையில் தமன்னா ஆடிய ‛காவாலா' பாடல், படம் வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. உலகம் முழுக்க டிரெண்டிங்கில் இடம் பிடித்த இந்த பாடலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் ரீல் வீடியோ வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் காவாலா பாடலுக்கு இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி, ரஜினிகாந்த் மீதான எனது அன்பு தொடரும் சமுக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
வீடியோ லிங்க் : https://twitter.com/HiroSuzukiAmbJP/status/1691731446917214612