சஞ்சய் தத்திற்கு தலையில் காயம்
ADDED : 786 days ago
ஹிந்தி நடிகர் சஞ்சய் தத். கேஜிஎப் 2 படத்தின் வெற்றிக்கு பின் தென்னிந்திய சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‛லியோ' படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். அடுத்து தெலுங்கில் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகும் ‛டபுள் ஐ ஸ்மார்ட்' படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. இந்நிலையில் சண்டைக்காட்சியின்போது எதிர்பாரதவிதமாக வாள் ஒன்று சஞ்சய் தத்தின் தலையில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட சஞ்சய் தத்திற்கு தலையில் இரண்டு தையல் போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.