மறைக்கப்பட்ட மருத்துவ சமூகம் பற்றிய படம் தயாராகிறது
ADDED : 863 days ago
பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் மற்றும் அல்முரியாத் சார்பில் 'அட்டு' திரைப்பட இயக்குநர் ரத்தன் லிங்கா மற்றும் ராஜ்குமார் வேலுசாமி தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தை மன்னவராஜன் இயக்குகிறார். அர்ஜூன் என்ற புதுமுகத்துடன் 'செம்பி ' படத்தில் நடித்த முல்லை நாயகியாக நடிக்கிறார். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. படம் குறித்து இயக்குனர் மன்னவராஜன் கூறும்போது தமிழக வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட ஒரு மருத்துவ இனம் குறித்த படமாக இது தயாராகிறது. விருதுகளை குவிக்கும் நோக்கத்தில் இதுவரை யாரும் சொல்லாத ஒரு சமூக வரலாற்றை இந்த படம் பேசப்போகிறது என்றார்.