ஹாரர் படங்களுக்கென்று தனி தயாரிப்பு கம்பெனி தொடக்கம்
ADDED : 781 days ago
தற்போது 50 சதவிகிதத்திற்கும் மேல் ஹாரர் கலந்த த்ரில்லர் படங்கள் தயாராகின்றன. குறைந்த பட்ஜெட்டில் நிறைவான ஒரு ஹாரர் படத்தை எடுத்து விட முடியும் என்கிற நிலையே இதற்கு காரணம். இதனை கருத்தில் கொண்டு ஹாரர் படங்களை மட்டும் தயாரிப்பதற்காக 'நைட்ஷிப்ட் ஸ்டூடியோ' என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளனர். தயாரிப்பாளர் ஒய் நாட் சசிகாந்த் மற்றும் தயாரிப்பாளரான சக்ரவர்த்தி ராமச்சந்திரா ஆகியோர் இணைந்து இதனை தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் சசிகாந்த் கூறும்போது, உள்நாட்டு ஹாரர் - த்ரில்லர் படங்களை உலகிற்கு எடுத்துச் செல்ல இது ஒரு அற்புதமான வாய்ப்பு. எனது ஒய் நாட் ஸ்டுடியோஸ் எப்போதுமே புது வகையான முயற்சிகளுக்கு வழி கொடுத்து வருகிறது, அதே சித்தாந்தத்தை கைப்பற்றி நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸின் முயற்சிகளும் அமையும். என்றார்.