மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
750 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
750 days ago
'சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் 'செம்பி' ஆகிய படங்களை தயாரித்த ஏ.ஆர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் 'லெவன்'. இயக்குநர் சுந்தர் சியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இயக்குகிறார். 'சரபம்', 'சிவப்பு' மற்றும் 'பிரம்மன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார். 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடிக்கிறார்.
இவர்களுடன் 'விருமாண்டி' புகழ் அபிராமி, 'வத்திக்குச்சி' புகழ் திலீபன், 'மெட்ராஸ்' புகழ் ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இமான் இசை அமைக்க, கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். நேற்று பூஜையுடன் படத்தின் பணி தொடங்கியது.
படம் பற்றி இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ் கூறும்போது ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக 'லெவன்' அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன், என்றார்.
750 days ago
750 days ago