மம்மூட்டி நடிக்கும் புதிய ஹாரர் படம்
ADDED : 793 days ago
மலையாள நடிகர் மம்மூட்டி முன்னனி நடிகராக இருந்தாலும் வித்தியாசமான கதைகளை தேர்தெடுத்து அவ்வப்போது நடித்து வருகிறார். தற்போது வித்தியாசமான ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகும் 'பிராமயுகம்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ராகுல் சதாசிவன் இயக்குகிறார். நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று(ஆக., 17) தொடங்கி உள்ளது. 2024ல் இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.