உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர் படத்தின் ஒரு வார வசூல் விவரம்

ஜெயிலர் படத்தின் ஒரு வார வசூல் விவரம்

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை அன்று திரைக்கு வந்தது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் 400 கோடி, 450 கோடி வசூலை நெருங்கி விட்டதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், ஜெயிலர் பட நிறுவனம், இன்று சமூக வலைதளத்தில் ஜெயிலர் படத்தின் ஒரு வார வசூல் குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில், கடந்த ஒரு வாரத்தில் ஜெயிலர் படம் 375. 40 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இப்போது வரை ஜெயிலர் படம் ஓடும் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் படையெடுத்து கொண்டிருப்பதால், கூடிய சீக்கிரமே இப்படம் 500 கோடி வசூலை எட்டிவிடும் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !