பள்ளிச் சீருடையில் பிக்பாஸ் ஜனனி கியூட் கிளிக்ஸ்
ADDED : 781 days ago
இலங்கையை சேர்ந்த தொகுப்பாளரான ஜனனி பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொண்டு பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் கியூட்டான ராணியாக வலம் வந்த ஜனனிக்கு தமிழ்நாட்டில் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் ஜனனி இண்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பள்ளிச்சீருடையில் மாணவி போல் க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்டின் மழை பொழிந்து வருகின்றனர்.