30 ஆண்டுகள் என்னுள் இருந்த ஆதங்கம் - ஏ.ஆர்.ரஹ்மான்
ADDED : 784 days ago
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛மாமன்னன்'. இந்த படத்தின் 50வது தின கொண்டாட்டம் சென்னையில் நடந்தது. இதில் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதில் பேசிய இப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‛‛இந்த படத்தின் கதை 30 ஆண்டுகளாக எனக்குள் இருந்த ஆதங்கம். இசையால் என்னால் அதை செய்ய முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது. அதனால் படமாக செய்ய முடிந்தவருடன் இணைந்து பணியாற்றினேன். இந்த படம் இவ்வளவும் தூரம் வந்ததற்கான முக்கிய காரணம் வடிவேலு தான். படத்தில் உதயநிதிக்கு பின்னால் பைக்கில் வடிவேலு செல்லும் காட்சி என்னை மிகவும் பாதித்தது. அதனால் முழுமையாக இந்த கதையை எடுத்து செய்தேன்'' என்றார்.