உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தயாரிப்பு நிறுவனம் துவங்கி கஜோலுடன் இணைந்து நடிக்கும் ஆதிபுருஷ் நாயகி

தயாரிப்பு நிறுவனம் துவங்கி கஜோலுடன் இணைந்து நடிக்கும் ஆதிபுருஷ் நாயகி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் திரைப்படம் வெளியானது. ராமாயண கதையை தழுவி உருவாகி இருந்த இந்த படத்தில் சீதை கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்திருந்தார். சொல்லப்போனால் இந்த படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் இன்னும் கொஞ்சம் பிரபலமானார் கிரித்தி சனோன். இந்த நிலையில் தற்போது டு பட்டி (Do Patti) என்கிற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார் கிரித்தி சனோன்.

ஹிந்தியில் மேன்மர்ஷியான் உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதிய கதாசிரியர் கனிகா தில்லான் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். நடிகை கஜோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் கிரித்தி சனோன் கதாநாயகியாக நடிக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லராக இந்த படம் உருவாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !