உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எதிர்நீச்சல் நந்தினிக்கு குரல் கொடுக்கும் பிரபலம் யார் தெரியுமா?

எதிர்நீச்சல் நந்தினிக்கு குரல் கொடுக்கும் பிரபலம் யார் தெரியுமா?

எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி என்ற கதாபாத்திரம் நேயர்களுக்கு மிகவும் பிடித்தமானது. நந்தினி கதாபாத்திரத்தில் நடிகை ஹரிப்பிரியா நடித்து வருகிறார். அந்த கதாபாத்திரத்தின் பலமே அவர் பேசும் வசனமும் டைமிங்கில் அடிக்கும் காமெடியுடன் அந்த கதாபாத்திரத்தின் குரலும் தான். எனவே, ரசிகர்கள் பலரும் நந்தினிக்கு குரல் கொடுப்பது யார் என கேட்டு வந்தனர்.
இந்நிலையில், நடிகை ஹரிப்பிரியா தனது இன்ஸ்டாகிராமில் 'நிறைய பேருக்கு இந்த கேள்வி இருக்கிறது. நந்தினியின் குரல் கொடுப்பது யார் என்று?. அது என்னுடையது தான். எனக்கு நானே டப்பிங் பேசுகிறேன்' என்று பதிவிட்டு நந்தினி கதாபாத்திரத்திற்காக டப்பிங் பேசும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !