அடுத்த ஐந்து மாதங்களில் ஸ்ரீ லீலா நடித்துள்ள ஐந்து படம் வெளியாகிறது!
ADDED : 810 days ago
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஸ்ரீ லீலா. இவர் கைவசம் ஒரு டஜன் படங்களுக்கு மேல் உள்ளது. தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள ஐந்து படங்கள் அடுத்த ஐந்து மாதங்களில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, முதலில் 'ஸ்கந்தா' படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது. இதையடுத்து 'பகவந்த் கேசரி' படம் ஆயுத பூஜை அன்று வெளியாகிறது.
தீபாவளிக்கு 'ஆதிகேசவா' படம் வெளியாகிறது. 'தி எக்ஸ்ட்ராடினரி மேன்' திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகிறது. இதை தொடர்ந்து அடுத்த வருட பொங்கல் அன்று 'குண்டூர் காரம் ' படம் வெளியாகிறது. மேலும், இப்படங்களின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலத்தில் எந்த ஒரு நடிகைக்கும் குறுகிய நேரத்தில் இவ்வளவு படம் தொடர்ந்து வெளியானது இல்லை.