பிரபாஸூக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள்!
ADDED : 780 days ago
நடிகர் பிரபாஸ் தற்போது 'கல்கி 2898 ஏ.டி' படத்தில் நடித்து வருகிறார். இதற்கு பிறகு இயக்குனர் மாருதி இயக்கத்தில் 'ராஜா டீலக்ஸ்' என தற்காலிகமாக தலைப்பு வைத்துள்ள படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை புதிய தலைப்பை விரைவில் அறிவிக்கவுள்ளனர்.
இப்படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மாளவிகா மோகனன், நிதி அகர்வால் என இருவரும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கின்றனர் என கூறப்படுகிறது.