அட்ஜஸ்ட்மென்ட் குறித்து மனம் திறந்த ரெஜினா!
ADDED : 789 days ago
கேடி பில்லா கில்லாடி ரங்கா,மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ரெஜினா காஸண்ட்ரா. இது அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியுள்ளார். அதன்படி, 'தனக்கு பட வாய்ப்புகள் இன்றி பெரிதாக நடிக்காமல் இருந்த காலகட்டத்தில் சிலரிடம் வாய்ப்புகள் கேட்டேன். அப்போது ஒருவர் அட்ஜெஸ்ட்மென்ட்க்கு தயாராக இருந்தால் உடனே வாய்ப்பு கிடைக்கும் என்றார். அந்த சமயத்தில் எனக்கு 20 வயது தான் அதனால் எனக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. அதன் பிறகு என் மேனேஜரிடம் தான் கேட்டு தெரிந்துகொண்டேன். ஆனால், அதன்பிறகு இதுபோன்ற சம்பவங்களை நான் எதிர்கொள்ளவில்லை' என மனம் திறந்து தெரிவித்துள்ளார்.