கேரளாவில் விக்ரம் படத்தை முந்திய ஜெயிலர்!
ADDED : 789 days ago
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ் குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஜெயிலர்'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று முதல் வாரத்தில் உலகளவில் ரூ.375 கோடியை கடந்து வசூலித்ததாக படக்குழுவினர்கள் ஏற்கனவே அறிவித்தனர்.
இந்த நிலையில் கேரளாவில் விக்ரம் படம் 50 நாட்கள் ஓடி வசூலித்த ரூ.40.10 கோடியை ஜெயிலர் படம் வெறும் 9 நாட்களில் கடந்து ரூ.40.35 கோடி வசூலித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. மேலும், ஜெயிலர் திரைப்படம் தான் கேரளாவில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.