அக்டோபரில் துவங்குகிறது சிம்புவின் புதிய படம்: ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்!
ADDED : 778 days ago
பத்து தல படத்தை அடுத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கும் தனது 48வது படத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அவர் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அதோடு, இதுவரை சிம்பு நடித்த படங்களில் இந்த படம் அதிகப்படியான பட்ஜெட்டில் தயாராக உள்ளது.
தற்போது இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வருகிற அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. மேலும், இதற்கு முன்பு சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, செக்கச் சிவந்த வானம், வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற ஐந்து படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ஆறாவது முறையாக இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.