வாய்ப்பு தருவதாக மைனர் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த இயக்குநர் போக்சோவில் கைது
ADDED : 781 days ago
மலையாளத்தில் கடந்த மே மாதம் பைனரி என்கிற படம் வெளியானது. இந்த படத்தை இயக்குநர் ஜாசிக் அலி என்பவர் இயக்கியிருந்தார். இதில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக கூறி மைனர் பெண் ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றார் என்றும், தொடர்ந்து பலமுறை ஏமாற்றி பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்துள்ளார் என்றும் இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சில நாட்களாகவே தலைமறைவாக இருந்த ஜாசிப் அலியை கோயிலாண்டி போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கேரளாவில் நடக்காவு என்கிற பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ஜாசிக் அலியை போலீசார் கைது செய்தனர்.