குஷி சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது
ADDED : 784 days ago
மகாநடி படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இணைந்து நடித்துள்ள படம் குஷி. இந்த படத்தை இயக்குனர் சிவா நிர்வானா இயக்கியுள்ளார். மலையாளத்தில் வெற்றிபெற்ற ஹிருதயம் புகழ் இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வகாப் இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 1ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் (165 நிமிடங்கள்) ஓடும் விதமாக இந்த படம் உருவாகி உள்ளது. ஏற்கனவே இந்த படம் மணிரத்னத்தின் அலைபாயுதே பாணியில் உருவாகி உள்ளதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், இந்த படத்தில் அளவுக்கதிகமான காதல் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாலயே இதற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.