அம்மாவாக நடிக்கும் சோனியா அகர்வால்
ADDED : 786 days ago
சோனியா அகர்வால் நடித்துள்ள புதிய படம் '7ஜி'. இதில் அவருடன் ஸ்மிருதி வெங்கட், சித்தார்த் விபின், சினேகா குப்தா, ரோஷன் பஷீர், சுப்பிரமணியம் சிவா நடித்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த 'வெப்' படத்தை இயக்கிய ஹாரூன் தயாரித்து, இயக்கி இருக்கிறார். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார், கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி ஹாருன் கூறும்போது, இது ஒரு ஹாரர் த்ரில்லர் படம். சோனியா அகர்வாலும், ஸ்மிருதி வெங்கட்டும் தோழிகளில் இருவரும் ஒரு சொகுசு அப்பார்ட்மெண்ட்டில் ஷேரிங் முறையில் வசிக்கிறார்கள். சோனியாவுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்த நேரத்தில் அந்த வீட்டில் சில அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கிறது. இருவரில் ஒருவர்தான் அதற்கு காரணம் அவர் யார்? ஏன் என்பதை ரசிகர்கள் யூகிக்க முடியாத திரைக்கதை கொண்டு செல்கிறது படம் என்றார்.