உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நூடுல்ஸ் படத்தின் டிரைலர் வெளியானது

நூடுல்ஸ் படத்தின் டிரைலர் வெளியானது

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படத்தை தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி. இவர் தற்போது நூடுல்ஸ் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். செப்டம்பர் எட்டாம் தேதி இந்த படம் திரைக்கு வரவுள்ளது. ஹரிஷ் உத்தமன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஷீலா ராஜ்குமார் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் எதிர்பாராத விதமாக போலீஸ் ஒருவரை ஹரீஷ் உத்தமன் அடித்து விட, அதனால் ஏற்படும் பின் விளைவுகளை மையமாகக் கொண்ட கதையில் இந்த நூடுல்ஸ் படம் உருவாகி உள்ளது. ஆக்சன், உணர்ச்சிகரமான காட்சிகள் என இடம் பெற்றுள்ள இந்த படம் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறுகையில், நூடுல்ஸ் படம் தமிழ் சினிமாவில் பேசப்படும் ஒரு படமாக இருக்கும். கண்டிப்பாக இந்த படம் ரசிகர்களை ஏமாற்றாது. இந்த கதையின் மீது நம்பிக்கை வைத்துதான் இப்படத்தை தயாரித்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !