சென்னையில் சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா
ADDED : 779 days ago
பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த சந்திரமுகி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சந்திரமுகி இரண்டாம் பாகத்தை பி. வாசு இயக்கி உள்ளார். ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு, லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 15ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் அரங்கில் இன்று(ஆக., 25) மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது.