பகவந்த் கேசரி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
ADDED : 779 days ago
அனில் ரவிபுடி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா தனது 108வது படமான 'பகவந்த் கேசரி' படத்தில் நடித்துள்ளார். காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷைன் ஸ்கிரீன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது வருகின்ற அக்டோபர் 19ம் தேதி அன்று இப்படம் வெளியாகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, கணேஷ் ஆன்தம் என்கிற பர்ஸ்ட் சிங்கிள் செப்டம்பர் 1ம் தேதி அன்று வெளியாகிறது என அறிவித்துள்ளனர். கூடுதலாக, இது விநாயகர் சம்மந்தப்பட்ட பாடல் என்பதால் இது அவரது பக்தர்களுக்கு பிடித்த பாடலாக அமையும் என்கிறார்கள்.