உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சித்ரா மரண வழக்கை விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவு

சித்ரா மரண வழக்கை விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவு

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் நாசரேத்பேட்டையில் உள்ள ஹோட்டல் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பில் வழக்கு தொடரப்பட்டு சித்ராவின் கணவர் ஹேம்நாத் உட்பட சிலரிடம் கடந்த 3 வருடங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சித்ராவின் தந்தை காமராஜ் இந்த வழக்கு விசாரணையை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திலிருந்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ், வழக்கை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தார். அதேசமயம் வழக்கின் விசாராணையை ஆறுமாதங்களில் முடிக்க வேண்டும் என திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !