சம்பளத்தை உயர்த்திய அனுஷ்கா!
ADDED : 772 days ago
நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 2020-ல் வெளிவந்த 'நிசப்தம்' படத்திற்கு பிறகு மூன்று வருடங்கள் கழித்து தற்போது ' மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' எனும் படத்தில் நடித்துள்ளார். உடல் எடையை குறைக்க இன்னும் கடுமையாக போராடி வருகிறார். இதனால் அவருக்கு பட வாய்ப்பு குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இப்போது மீண்டும் அனுஷ்காவிற்கு பட வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளது. இதனால் இதுவரை ரூ.3 கோடி சம்பளம் வாங்கி வந்த அனுஷ்கா இப்போது ரூ.6 கோடியாக சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.