குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி
ADDED : 771 days ago
கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை நாளை மறுநாள் (ஆக.,29) கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல பிரபலங்கள் கடந்த சில நாட்களாகவே ஓணம் கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர்.
அந்தவகையில், இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தம்பதி, குழந்தைகளுடன் சேர்ந்து முதல் ஓணம் பண்டிகையை கொண்டாடி உள்ளனர். தங்களது குழந்தைகளான உயிர் மற்றும் உலகம் ஆகியோருடன் ஓணம் கொண்டாடிய புகைப்படத்தை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகியுள்ளது.