அர்ஜுன் தாஸ் குரலில் வெளியாகும் பவன் கல்யாண் பட டீசர்
ADDED : 852 days ago
சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஓ.ஜி' . பிரகாஷ் ராஜ், பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரேயா ரெட்டி,என்ரான் ஹஸ்மி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த படத்தின் டீசர் வருகின்ற செப்டம்பர் 2ம் தேதி பவன் கல்யாண் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என ஏற்கனவே அறிவித்தனர். இப்போது டீசர் குறித்து கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. இந்த டீசருக்கு பின்னனி குரல் மூலம் கதையை கூற அர்ஜுன் தாஸ் தனது குரலை கொடுத்துள்ளாராம்.