ஜவான் படத்தின் மூன்றாவது சிங்கிள் அப்டேட்
ADDED : 820 days ago
அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் 'ஜவான்'. நயன்தாரா, பிரியாமணி , விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தீபிகா படுகோன் சிறப்பு வேடத்தில் தோன்றி உள்ளார். அனிரூத் இசையமைக்கும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி அன்று உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகின்றனர்.
ஏற்கனவே இந்த படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஜவான் படத்தில் இருந்து மூன்றாவது சிங்கள் ' நாட் ராமையா வஸ்தவையா' எனும் முழு வீடியோ பாடல் நாளை வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.