காஷ்மீரில் எடுக்கப்பட்ட ஜப்பான் பட பாடல்
ADDED : 783 days ago
ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். அனு இமானுவேல், சுனில், விஜய் மில்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டிரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகிறது. ஜப்பான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் மீதம் உள்ளது. இதற்காக காஷ்மீருக்கு ஜப்பான் படக்குழுவினர்கள் சென்றுள்ளனர். இந்த பாடலுக்கு சாண்டி நடனம் அமைக்கிறார். இப்போது பொதுமக்கள் காஷ்மீரில் கார்த்தியை சந்தித்து போட்டோ எடுத்துள்ளனர் .இந்த போட்டோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.