சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்
ADDED : 286 days ago
கருப்பு படத்தை அடுத்து வெங்கி அட்லூரி இயக்கும் தனது 46வது படத்தில் நடித்துள்ளார் சூர்யா. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது. இந்த படம் குடும்ப கதையில் உருவாகி இருப்பதாகவும், கஜினி படத்தின் சஞ்சய் ராமசாமி போன்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடிப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், தற்போது சூர்யா 46வது படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛இந்த படம் 45 வயது நபருக்கும், 20 வயது பெண்ணுக்கும் இடையிலான உறவை பற்றிய கதையில் உருவாகி உள்ளது. பல விதமான உறவுகளின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய கதையில் இப்படம் தயாராகி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.