ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்
ADDED : 24 minutes ago
அருண் விஜய் நடிப்பில் டிச., 25ம் தேதி திரைக்கு வந்த படம் ரெட்ட தல. கிரிஷ் திருக்குமரன் இயக்கியுள்ள இப்படத்தில் சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் திரைக்கு வந்து இரண்டு நாட்களில் 2 கோடி வசூலித்து இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது.
அதேப்போல் இதே தேதியில் திரைக்கு வந்த இன்னொரு படம் சிறை. சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரம் பிரபு, எல்.கே.அக் ஷய் குமார், அனிஷ்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் கடந்த இரண்டு நாட்களில் 2 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.