காஷ்மீரில் படப்பிடிப்பு முடித்துவிட்டு சென்னை திரும்பிய சிவகார்த்திகேயன் படக்குழு
ADDED : 820 days ago
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அவரது 21 வது படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது படக்குழுவினர் சென்னை திரும்பி இருக்கிறார்கள். ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் இந்த படத்தில் போர்க்களம் சம்பந்தப்பட்ட காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக இரண்டாம் கட்ட படிப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ள நிலையில், சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகிறது. அதையடுத்து மீண்டும் காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அப்போது கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி படமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.