உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காதலருடன் ஜான்வி திருப்பதியில் சாமி தரிசனம்

காதலருடன் ஜான்வி திருப்பதியில் சாமி தரிசனம்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் பிசியாக நடித்து வருகிறார். முதன்முறையாக தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக தேவாரா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஷிகார் பஹாரியா என்ற தொழில் அதிபரை ஜான்வி காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. இந்நிலையில் தனது காதலருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார் ஜான்வி கபூர்.

பாவாடை தாவணியில், ஜான்வி கபூர் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. ஒவ்வொரு வருடமும் நடிகை ஜான்வி கபூர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த ஆண்டின் துவக்கத்திலும் தன் காதலருடன் திருப்பதி வந்தவர் தற்போது மீண்டும் வந்திருப்பது திருமண செய்திகளை கிளப்பிவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !