என்.டி.ராமராவின் உருவம் பொறித்த 100 ரூபாய் சிறப்பு நாணயம் : ஜனாதிபதி வெளியிட்டார்
ADDED : 816 days ago
தெலுங்கு சினிமாவின் கடவுளாக கொண்டாடப்படுகிறவர் என்.டி.ராமராவ். மூன்று முறை ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆந்திர மக்களின் மனதில் கிருஷ்ண பரமாத்மாவாக பார்க்கப்படுகிறவர். அவரது நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக என்.டி.ராமராவ் உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் சிறப்பு நாணயத்தை, தலைநகர் புதுடில்லியில் நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் என்டிஆரின் மகன்கள், மகள்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் என்டிஆரின் மருமகனுமாக சந்திரபாபு நாயுடுவும் கலந்து கொண்டார். என்டிஆரின் பேரனும், பிரபல ஹீரோவுமான ஜூனியர் என்டிஆர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.