உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனின் புதிய தோற்றம் வெளியானது

புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனின் புதிய தோற்றம் வெளியானது

கடந்த 2021ம் ஆண்டில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'புஷ்பா'. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் டைட்டில் டீசர் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

சமீபத்தில் 2021ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருது புஷ்பா படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு அறிவித்தனர். இதனை புஷ்பா படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். இப்போது புஷ்பா 2ம் பாகத்தில் இருந்து அல்லு அர்ஜுனின் புதிய தோற்றத்தை வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !