கென்னியுடன் டான்ஸ் ஆடிய கமல் பட நாயகி
ADDED : 768 days ago
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரேகா தற்போது சின்னத்திரை சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் ரேகாவை தங்களது சொந்த தாயை போலவும், சகோதரி போலவும் பாசம் காட்டி பழகி வருகின்றனர். அவரும் அடுத்த தலைமுறை இளசுகளுடன் ஜாலியாக பழகி வருகிறார். இந்நிலையில், டான்ஸ் ஜோடி டான்ஸ் பிரபலமான கென்னியுடன் புன்னகை மன்னன் படத்தின் 'என்ன சத்தம் இந்த நேரம்' பாடலுக்கு ரேகா நடனமாடியுள்ளார். அந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த வயதிலும் ரேகாவின் நடிப்பும் எக்ஸ்பிரஸன்களும் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் ரேகாவை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.