தி பேமிலி மேன் தொடரில் சிரஞ்சீவி?
ADDED : 765 days ago
ராஜ் மற்றும் டி.கே இயக்கத்தில் கடந்த 2019, 2021ம் ஆண்டுகளில் இரண்டு சீசன்களாக வெளிவந்த வெப் தொடர் 'தி பேமிலி மேன்' . இதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா, நீரச் மாதவ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இது மூலம் பல சர்ச்சைகள் வெடித்தாலும் ரசிகர்களிடையே ஆதரவைப் பெற்றது. இப்போது இதன் மூன்றாம் சீசன் தயாராகி வருகிறது.
சமீபத்தில் தயாரிப்பாளர் அஸ்வின் தத் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே, தி பேமிலி மேன் வெப் தொடரை உருவாக்குவதற்கு முன்பே திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டபோது அதில் ஹீரோவாக நடிக்க சிரஞ்சீவி உடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது ஆனால், சிரஞ்சீவி ஒரு சில காரணங்களால் இதில் நடிக்கவில்லை என தெரிவித்தார். தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.