துபாயில் உள்ள புர்ஜ் கலிபாவில் திரையிடப்பட்ட ஜவான் டிரைலர்
ADDED : 765 days ago
அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே, யோகி பாபு, பிரியாமணி உட்பட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜவான். வருகிற 7-ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலர் நேற்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டது. ஆக்ஷன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஷாரூக்கான் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் ஜவான் படத்தின் டிரைலரை துபாயில் உள்ள உலகின் மிக உயர கட்டிடமான புர்ஜ் கலிபாவில் திரையிட்டுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் ஷாரூக்கான், அட்லீ, அனிருத் ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள். இதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.