மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற தமன்னா
ADDED : 765 days ago
ஜெயிலர் படத்தை அடுத்து அரண்மனை 4 உட்பட மூன்று படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. சமீபத்தில் விடுமுறை நாளை கழிப்பதற்காக தனது காதலரான நடிகர் விஜய் வர்மா உடன் வெளிநாடு சென்று இருந்தார் தமன்னா. இந்த நிலையில் தற்போது அவர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். மாலத்தீவில் தான் இருக்கும் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அங்குள்ள கடற்கரையில் வானவில் பின்னணியில் இருக்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பதிவிட்ட ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகளை பெற்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களில் தமன்னா மட்டுமே இருப்பதால் அவரது காதலர் விஜய் வர்மா உடன் சொல்லவில்லை என்பது தெரிகிறது.