அமெரிக்காவில் ரசிகராக மாறிய விஜய்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் அப்பா, மகன் என இரண்டு தோற்றத்தில் விஜய் நடிப்பதால் இதன் லுக் டெஸ்ட்காக விஜய், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா ஆகியோர் சில நாட்கள் முன்பு அமெரிக்கா சென்றுள்ளனர். அமெரிக்காவில் உள்ள தியேட்டர் ஒன்றில் 'ஈக்யுலைசர் 3' என்கிற படத்தை விஜய், வெங்கட்பிரபு உள்ளிட்டோர் பார்த்துள்ளனர். அந்த படத்தில் வருகின்ற டென்சில் வாசிங்டன் எனும் கதாபாத்திரத்திற்கு விஜய் ரசிகராகவே மாறிவிட்டார். அவர் திரையில் தோன்றிய போது அவரை பார்த்து விஜய் கொண்டாடிய போட்டோவை வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார். அதோடு முதல்முறையாக நமது விஜய் ரசிகராகவே மாறிய தருணத்தை நான் போட்டோ எடுத்தேன்'' என குறிப்பிட்டுள்ளார் வெங்கட்பிரபு. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.