சூர்யாவின் கங்குவா - ராஜமுந்திரியில் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
ADDED : 810 days ago
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் கங்குவா. ரூபாய் 350 கோடி பட்ஜெட்டில் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வந்த நிலையில், அதன் பிறகு ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் நடைபெற்று வந்தது. அங்கு சூர்யா பாலிவுட் நடிகர் பாபி தியோல் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ராஜமுந்திரியில் நடைபெற்று வந்த கங்குவா படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. இதையடுத்து படக் குழுவினர் அனைவரும் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் பாங்காங்கில் நடைபெற இருப்பதாகவும் படக்குழு ஒரு தகவல் வெளியிட்டுள்ளது.