உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படம் தயாரிக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படம் தயாரிக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் கடந்த 2013ம் ஆண்டு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் மதயானை கூட்டம் என்ற படத்தை தயாரித்தார். கதிர் - ஓவியா நடித்த இந்தப்படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி 15 கோடி ரூபாய் வசூல் செய்தது. என்றாலும் அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக எந்த படத்தையும் தயாரிக்காத ஜி.வி.பிரகாஷ், தற்போது தனது 25வது படத்தை தானே தயாரித்து நடிக்கப் போகிறார். ‛கிங்ஸ்டன்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை கமல் பிரகாஷ் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்- நடிகைகள் சம்பந்தப்பட்ட தகவல் விரைவில் வெளியாக உள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !