மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
736 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
736 days ago
அனில் சர்மா இயக்கத்தில், சன்னி தியோல், அமிஷா பட்டேல் மற்றும் பலர் நடிக்க ஆகஸ்ட் 11ம் தேதி வெளிவந்த படம் 'கடார் 2'. சுமார் 60 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்தப் படம் 600 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.
இந்தியாவில் மட்டும் மிகக் குறைந்த நாட்களில், அதாவது 24 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலைக் கடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நேற்று வரையிலும் 490 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இன்று 500 கோடி வசூலைத் தொட்டு விடுமாம். இதற்கு முன்பு 34 நாட்களில் 'பாகுபலி 2' படமும், 28 நாட்களில் 'பதான்' படமும் அந்த சாதனையைப் படைத்திருந்தது. அவற்றை 'கடார் 2' முறியடிக்க உள்ளது.
குறைந்த நாட்களில் 500 கோடி வசூலைப் பெற்ற ஒரே ஹிந்தி ஹீரோ என ஷாரூக்கான் மட்டுமே இருந்தார். அவராவது டாப் நடிகர்கள் பட்டியலில் உள்ளார். ஆனால், சன்னி தியோல் அந்த டாப் பட்டியலில் இல்லவே இல்லை. இருந்தும் அவரது படம் இந்த சாதனையை நிகழ்த்துவது ஆச்சரியமாக உள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
736 days ago
736 days ago