மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
736 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
736 days ago
சின்னத்திரை நடிகையான ஸ்ருதி சண்முகத்தின் கணவர் அரவிந்த் சென்ற மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். திருமணமாகி ஒருவருடமே ஆகிய நிலையில் ஸ்ருதியின் வாழ்க்கையில் நிகழ்ந்த இந்த சோகத்தை நினைத்து பலரும் வருந்தி அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர். கணவன் இறந்து ஒரு மாதம் கழித்து ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராமில், 'நீ என்னுடன் இல்லாமல் போய் ஒரு மாதம் ஆகிவிட்டதென்றாலும் உன்னுடைய ஆன்மா நான் உடைந்து அழும்போதெல்லாம் அன்பு காட்டுகிறது. நான் உன் இருப்பை உணர்வதை யாரிடமும் விளக்க முடியாது. நான் மட்டுமே உணர முடியும். ஏனென்றால் நம் இருவருக்கும் ஒரே ஆத்மா உள்ளது. நீ என் பாதுகவலராய் இருப்பாய். நீ என்னை விட்டு செல்ல மாட்டாய். என் உயிர் மூச்சு உள்ளவரை உன்னுடன் வாழ்ந்த அழகான நினைவுகளை சுமந்து இருப்பேன். இப்படிக்கு அரவிந்த் ஸ்ருதி' என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த துயரமான காலக்கட்டத்திலிருந்து சீக்கிரமே மீண்டு வர பலரும் ஸ்ருதிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
736 days ago
736 days ago