கோலாகலமாக நடந்த நாஞ்சில் விஜயன் திருமணம்
ADDED : 844 days ago
சின்னத்திரை நகைச்சுவை நடிகரான நாஞ்சில் விஜயனுக்கு கடந்த ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், நாஞ்சில் விஜயன் யாரை திருமணம் செய்கிறார்? எப்போது திருமணம் செய்யப் போகிறார்? என்ற தகவல் எதையும் அவர் வெளியிடவில்லை. இந்நிலையில், நேற்றைய தினம் நாஞ்சில் விஜயனின் திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்து முடிந்துள்ளது. நாஞ்சில் விஜயனின் மனைவியின் பெயர் மரியா. இவர் விஜயனின் நண்பர்கள் மூலம் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நாஞ்சில் விஜயனின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.