2023ல் தமிழில் அதிகம் வசூலித்த தெலுங்கு படம்
ADDED : 760 days ago
சிவா நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 'குஷி'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஹேஷம் அப்துல் வாகப் இசையமைத்துள்ளார். கடந்த வாரத்தில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களே பெற்றது. உலகளவில் இந்த படம் 70 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளது. ஏற்கனவே இத்திரைப்படம் முதல் மூன்று நாட்களில் தமிழகளவில் ரூ. 4.7 கோடிக்கும் மேல் வசூலித்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுவரை தமிழ்நாட்டில் ரூ.7 கோடி வசூலித்துள்ளது. மேலும், 2023ம் ஆண்டில் இதுவரை தமிழ்நாட்டில் வெளிவந்த தெலுங்கு டப்பிங் படங்களில் இப்படம் தான் அதிக வசூல் என குறிப்பிட்டுள்ளனர் .