வெப் சீரியஸ் இயக்கும் வஸந்த்
ADDED : 759 days ago
ஆசை, ரிதம், நேருக்கு நேர், அப்பு ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இயக்குனர் வஸந்த். அதன் பிறகு அவர் இயக்கிய ஒரு சில படங்கள் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. கடைசியாக அவர் இயக்கத்தில் திரைக்கு வந்த மூன்று பேர் மூன்று காதல் படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சமீபத்தில் அவர் இயக்கத்தில் ஓடிடியில் வெளிவந்த 'சிவரஞ்சனியும் சில பெண்களும்' ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களைப் பெற்றது. மற்றும் நவரசா வெப் தொடரில் ஒரு பகுதியை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஓடிடி தளத்திற்காக வசந்த் புதிய வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார். இதன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.